Total Pageviews

Wednesday, February 15, 2012

பிச்சை பத்திரம் (பாத்திரம்) ஏந்தி வந்தோம் அய்யனே! எம் அய்யனே!!
அம்மையும் அப்பனும் தந்ததா? .................
அத்தனை செல்வமும் ஓரிடத்தில்
யாம் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் ?
வெறும் பத்திரம் (பாத்திரம்) உள்ளது எம்மிடத்தில்
அதன் சூத்திரம் உள்ளது எவ்விடத்தில் ?
ஒரு முறையா? இரு முறையா? பலமுறை
பலபிழைப்பு எடுக்க வைத்தாய்..........
பொருளுக்கு அலைந்திடும் பொருள் அற்ற
வாழ்கையும் துரத்துதே ...........
பணம் பணம் என்று அலைகின்ற
எம் மனம் இன்று பிதற்றுதே...........


(இது நான் கடவுள் படத்தில் உள்ள பாடலில் எனக்கு பிடித்த வரிகள். ஒரு சிலருக்கு பிடிக்காத வரிகள் )

ஒரு விஷயம் நல்லா புரியுது. அல்லாஹ் கொடுக்கணும்ணு
நாடிட்டாம்னா ஷட்டர திறந்து வியாபாரம் பண்ணினாலும் கொடுப்பான்.
இல்லை ஷட்டர மூடிட்டு ரோட்டில நின்னாலும் கொடுப்பான்.


Tuesday, February 14, 2012

சகோதரர்களே !
சமீபத்தில் சென்னை மண்ணடி ஸ்கூலில் நடந்த கொலைக்கு மனஅழுத்தம் தான் காரணம் என்கிறார்கள். இந்த கொலை செய்யப்பட்ட டீச்சரும் தனது குடும்ப சூழ்நிலையால் மன அழுத்தத்தால்(Stress) பாதிக்கப்பட்டவர். பையனும் தனது கல்வி சுமையால் மன அழுத்தத்திற்கு (Stress) ஆளானவர் . அவர்கள் இருவரின் குடும்பத்தாரும் முதலிலேயே அவர்களை கவனித்து இருந்தால் இப்படி ஒரு கொடூரமான சூழ்நிலை உருவாக்கி இருக்காது.
நமது மக்கள் இப்படி மன அழுத்தம், மன சிதைவு, மன நோய் போன்றவற்றை பற்றி அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. இவைகளால் பாதிக்கப்பட்டவர்களால், பாதிக்கப்பட்டவர்களை விட பிறருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தான் பிரச்சனை. அதனால் இந்த நோயாளிகளை ஆரம்பத்திலேயே முயற்சி செய்தால் கண்டிப்பாக குணபடுத்திவிடலாம்.
ஆனால் நாம் எவ்வளவு தான் சொன்னாலும் அவர்கள் உறவினர்களும், நண்பர்களும் கண்டு கொள்வதில்லை. மன அழுத்தம் மனசிதைவாக மாறி அது முற்றி முழு மனநோயாளி (பைத்தியம், சைக்கோ) ஆன பின்னர் அவர்களை எங்கேயாவது கொண்டு விடும் முன் சரியான முறையில் கவனித்தால் குணபடுத்தி விடலாம்.
''யா அல்லாஹ் இந்த உலகத்தில் உள்ள அனைத்து மன நோயாளிகளுக்கும் பூரண குணத்தையும், நலத்தையும் வழங்குவாயாக''