Total Pageviews

Showing posts with label முறிந்த மனங்கள். Show all posts
Showing posts with label முறிந்த மனங்கள். Show all posts

Tuesday, January 10, 2012

சென்னையில் நடந்து கொண்டு இருக்கும் புத்தக கண்காட்சியில் சில புத்தகங்கள் வாங்கினேன்.அதில் ஒரு புத்தகம் ''முறிந்த மனங்கள்'' . அது மனசிதைவு (Psycho, mental disorder) சம்பந்தமாக Dr. விஜய் நாகசாமி அவர்கள் எழுதியது.
அதில் மனச்சிதைவுக்கு சில காரணங்களை டாக்டர் கூறுகிறார். தமிழில் மனச்சிதைவு பற்றிய புத்தகங்கள் மிக குறைவு. இந்த புத்தகம் மிக தெளிவாக விளக்குகிறது.




  1. வாழ்க்கை நெருக்கடி


  2. சிறு வயதில் துன்புருத்தப்பட்டிருந்தால்


  3. பரம்பரை காரணம் (25%)


  4. சமுதாய குழப்பம்


இதில் சமுதாய குழப்பம் என்பது இந்த சமுதாயத்தை திருத்த தான்மட்டுமே பிறந்திருப்பதாக மற்றவர்கள் சொல்வதை உண்மையென்று நம்பி, சமுதாயத்தை திருத்த போவதாக சொல்லி கிளம்பி கடைசியில் மனச்சிதைவுக்கு ஆளாகிவிடுவது. மேலும் இந்த மாதிரி சைக்கோ ஆகிரவர்களால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் குடும்பத்தினரும், சமுதாயமுமே. இதனால் மனச்சிதைவுக்கு ஆளான சைக்கோ மக்களால் கவனிப்பாரற்றும், ஒதுக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர் இவர்களை அச்சத்தோடும் கூட (உறவினர்கள் உட்பட) நோக்குகிறார்கள்.



ஆனால் இந்த மனச்சிதைவை (சைக்கோ) உறவினர்கள் அல்லது நண்பர்கள் நினைத்தால் அவர்கள் மனநல மருத்துவர்(Psychiatrist) உதவியுடன் குணப்படுத்தலாம். இதுவே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி ஆகும்.