மேல் வீட்டில் எச்சி துப்பல், கீழ் வீட்டில் LCD. TV உடைப்பு.
இப்படி இருந்த LCD TV
கொல்லைல போவான் இப்படி நொறுக்கிட்டான்.
சகோதரர்களே ! இந்த பண்ணையாரின் புதிய அவதாரம். மேல்வீட்டில் இருந்து இவரு கீழ் வீட்டில் இருக்கிறவர்கள் சொந்தகாரர்கள் என்றுகூட பார்க்காமல் எச்சி துப்பி விடுவாராம். அதை அவர்கள் வெளியே சொல்லக் கூடாதாம். அல்லாஹ் மேல அச்சம் இல்லாமல் நம்மை யார் என்ன செய்து விடுவார்கள் என்ற தைரியத்தில் இவன் எச்சிதுப்பி வந்தான். ஆனால் அல்லாஹ் அவனை கீழ் வீட்டிற்கே கொண்டுவந்து விட்டான். (மேல வீட்டை ஒத்திக்கு விட்டுவிட்டார். ஒத்திக்கு விட்ட ஒரிஜினல் தௌகீதுவாதி.) கீழ் வீட்டுக்கு வந்த பிறகும் புத்தி வரவில்லை. மீண்டும் அதே சொந்தகாரர்களின் வீட்டிற்க்கு வெளிச்சம்,காற்று வரமுடியாதவாறு வீட்டின் பொது வராண்டா ஜன்னலை அடைத்து விட்டான்.
இதற்கு முன் அவன் எச்சி துப்பியதை கூட வெளியே சொல்லாதவர்கள் ஜன்னல் விஷயத்தை இருவருக்கும் பொதுவான தனது உறவினர்களிடம் சென்று அவனுக்கு புத்திமதி சொல்லி ஜன்னலை திறக்கச் சொல்லுங்கள். வீட்டில சின்ன பிள்ளைகள் இருக்கு. கொஞ்சமாவது அல்லாஹ்விற்கு பயந்து நடக்கச் சொல்லுங்கள். அதற்கு அந்த பொதுவான உறவினர் ‘’ நாம சொன்ன அவன் கேட்கிற மாதிரியா இருக்கான். அவனிடன் நான் இதை பற்றி பேச விரும்பலை’’ என்று கூறி விட்டனர்.பின்னர் இந்த கொடூரம் ஊரில் உள்ள உறவினர் ஒருவ ரிடம் பஞ்சாயத்திற்கு சென்று உள்ளனர்.அதற்கு அவரும் “’எனக்கு எல்லாம் தெரியதான் செய்கிறது. அவன் கொஞ்ச நாளாக சரி இல்லை. அதனால அவன் விசயமா நான் எதும் பேச மாட்டேன்.” என்று அவரும் பின் வாங்கிவிட்டார். அவர்களும் அல்லாஹ் பார்த்து கொள்வான் என்று பொறுமை காத்துள்ளனர்.
ஜன்னல் விஷயத்தை இவர்கள் வெளியே சொன்னதை கேள்விபட்ட சின்ன பண்ணை நேர அவர்கள் வீட்டிற்கு சென்று ‘’இதை ஏன் வெளியே சொன்ன’’ என்று கூறி அந்த ஜன்னல் வழியாக சென்ற கேபிள் டீவீ ஓயரை பிடித்து இழு-இழுன்னு இழுத்தி ருக்கிறான்.அந்த ஓயர் டீவீயுடன் இணைக்கப்பட்டிருந்தலால் சுவற்றில் மாட்டப் பட்டிருந்த L.C.D டீவி கீழே விழுந்து நொறுங்கி விட்டது. இவன் உடைத்து விட்டான். பாவம் அவர்களுக்கு பொருளும் நஷ்டம், மனதிலும் கஷ்டம். இது போன்று பலருடைய மனங்களையும் காயப் படுத்தி சாபத்திற்க்கு உள்ளாகி இருக்கிறான். ஒரு LCD டிவி வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பது உழைத்தால்தான் தெரியும். உடைக்கின்ற அவனுக்கு எங்கே தெரியப் போகிறது.
எனவே சகோதரர்களே தயவுசெய்து (முடிந்தால்) அவனுக்கு மார்க்கம் என்றால் என்னவென்று புரிய வைத்து, மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று புத்திமதி சொல்லுங்கள். இதை விட்டுவிட்டு திரும்ப திரும்ப அவருக்கு ஆதரவாக ஜால்ரா போடாதீர்கள். இந்த மாதிரி உங்கள் உறவினருக்கு நடந்தால் அவர்கள் எப்படி பாதிப்படைவார்கள் என்று உணர்ந்து கொள்ளுங்கள். சகோதரர்களே நீங்கள் உண்மை யிலேயே அல்லாஹ்வை அஞ்சக்கூடியவாராக இருந்தால் அவன் செய்ய கூடிய பாவத்தில் நீங்களும் பங்காளியாக ஆகி விடாதீர்கள். அவர் திருந்தி வாழ எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
''இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்''. (அல் குர்ஆன்-5: 2 )
இப்படிக்கு,
அவன் செயலால் பாதிக்கப்பட்டவர்கள்.
· ஓதி கொடுக்க வந்த மோதியார் சைக்கிளை காற்று பிடுங்கிவிட்ட சோகக் கதை விரைவில்.......
No comments:
Post a Comment