நண்பன் என்ற பெயரில் இந்த மெசேஜ் ஒருவர் அனுப்பி உள்ளார்;
''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்பது இஸ்லாமிய முகமன் என்பதை தங்களுக்கு நினைவு படுத்துகிறேன். ஆனால் நீங்கள் முதலீடு என்று எழுதி உள்ளீர். அது உண்மையே. ஏனெனில் சலாம் நன்மைக்கான முதலீடு என்பதையும் நினைவுபடுத்துகிறேன். அல்லாஹ் சொல்ல சொல்கிறான். நபி (ஸல்) அவர்களும் அதிகமாக சலாத்தை பரப்புங்கள் என்று கூறி இருக்கிறார்கள். அவர்களும் அதை செய்தார்கள். ஆகையால் இன்ஷா அல்லாஹ் அந்த முதலீடை அதிகமாக செய்யத்தான் போகிறோம்.( அந்த முதலீடில் யாரும் கள்ள கணக்கு, நஷ்ட கணக்கு காட்ட முடியாது. அது அல்லாவிற்கும் அடியானுக்கும் உள்ள கணக்கு. அல்லாஹ் பெயர் சொல்லி கூட யாரும் கள்ள கணக்கு காட்ட முடியாது). தாங்கள் வெறுத்தாலும் சரி.
"'அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹமதுல்லாஹி பரக்காதுஹு) ''
அடைப்பு குறிக்குள் இருப்பவை எனது(நிஜாம்) கருத்து.