Total Pageviews

Tuesday, September 6, 2011

தமிழக முஸ்லிம்களுக்கு முக்கிய அறிவிப்பு & வேண்டுகோள்!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் ஊரில் SUBMITTERS TO GOD ALONE (கடவுளுக்கே சரணம்) என்ற இஸ்லாத்திற்கு எதிரான குழுவினர் உள்ளனர். ஆனால் அவர்கள் கொண்டுள்ளதோ முஸ்லிம் பெயர்கள். அவர்களுக்கு எதிராக அவ்வூர் ஜமாத் 19-08-09 அன்று தீர்மானம் நிறைவேற்றியது.

  • அவர்களுக்கு நிக்காஹ் தப்தர் கொடுப்பதில்லை.
  • அவர்களுக்கு முஸ்லிம் கபர்ஸ்தானில் அடக்க அனுமதி இல்லை.
  • கல்யாண வைபவங்களுக்கு அவர்களை அழைப்பதில்லை. அவர்களுடைய விழாவுக்கு போவதுமில்லை என்று அவர்களை விலக்கி வைத்தது.

இதை எதிர்த்துஅவர்கள் கோர்ட்டுக்கு போனார்கள். சென்னை ஹைகோர்ட் பெஞ்ச் அவர்களுடைய வழக்கை 23-06-11 அன்று தள்ளுபடி செய்துவிட்டது.

  • இவர்கள் அல்லாஹ்வை GOD என்பவர்கள்.
  • குர் ஆன் மட்டும் போதும் என்று சொல்லி அதில் 9 : 128 & 129 ஆகிய வசனங்களை நீக்கியுள்ளார்கள்.
  • நபிகள் நாயகத்தையும் ஹதீஸையும் முழுமையாக மறுத்துவிட்டு ரஷாத் கலிபாவை இறுதித்தூதராக ஏற்பவர்கள் ( 7 :158 , 33 : 40 ஐ பார்க்கட்டும் ) .
  • கலிமாவில் “லாயிலாஹா இல்லல்லாஹ்” மட்டும் தான் சொல்வார்கள் (முகமது(ஸல்) அதில் வருவதால்).
  • ஐந்து வேளையும் அல்ஹம்து மட்டும் ஓதி 2 ரக்அத்கள் தான் தொழுவார்கள், முஹம்மது (ஸல்) அவர்களின் பெயர் அதில் வருவதால் அத்தஹியாத் ஓதமாட்டார்கள்.
  • ஹஜ் நான்கில் எந்த மாதத்திலும் நிறைவேற்றலாம் என்பார்கள்.
  • பணம் கிடைத்த அன்றே 2 ½ சதம் ஜக்காத் கொடுத்துவிட வேண்டும் என்பார்கள்.

    இவர்கள் இஸ்லாமிய அடிப்படைகளைத் தகர்த்தவர்கள். ஸவூதி ராபிதா, தேவ்பந்த், பாக்கியாத் ஆகிய அமைப்புகள் இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஃபத்வாக் கொடுத்துள்ளனர்.

    • இவர்களில் ஒருவர் மனைவியுடன் உடலுறவு கொண்டபின்பும் குளிக்காமல் தொழுகையை நிறைவேற்றலாம் என கூறினார்.
    • இன்னொருவர் எல்லா வேதங்களையும், யஜூர், அதர்வன உள்பட குத்பாவில் படிக்க வேண்டுமென்றார்.
    • விநாயகரும் நமக்குக் கடவுளே என்றார் இன்னொருவர்.
    • இப்படி ஆளுக்காள் பத்வா கொடுத்தார்கள்.
    • ஒருவர் நானும் ஒரு நபியே என்று அறிவிப்புச்செய்தார்.

    இந்த குழப்பங்களுக்குக் காரணம் என்ன என்பதை அவர்களே ஆராய்ந்து பார்க்கட்டும். ஜமாத்துல் உலமா சபை இதனைத் தமிழகமெங்கும் ஜும்ஆக்களில் சொல்ல ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

நன்றி.

வஸ்ஸலாம்.
அன்புடன்

கேப்டன்.N.A.அமீர் அலி M.A.

1 comment:

Unknown said...

எங்களுக்கு குறிப்பிட்ட தனி நபர் காழ்ப்புணர்வு காரர்களை தவிர மற்ற அனைவர்களும் நடுநிலையாளர்களே ,அதாவது தலைவர் ,வைஸ் உதுமான்;பொருளாளர் அபுல்ஹசன் உட்பட 7 ஆகஸ்ட், 2011 5:51 அம என்று எழுதி உள்ளீர்கல். பின்னர் ஏன் தலைவர் வைஸ் உதுமான் அவர்களை புறம்போக்கு என்று கூறினீர்கள்.(எக்ஸ் ஜமாஅத் தலைவர், எக்ஸ் பஞ்சாயத் தலைவர் ஆகிய இருவருடன் நீங்கள் இருக்கும் போது ). உங்களுக்கு தேவை என்றால் நடுநிலையாளர். தேவைஇல்லை என்றால் புறம்போக்கா ? . புறம்போக்கு என்று எதற்கு கூறினீர்கள்? அது முறையா? (இது பண்ணை நிவ்சிக்கும் அனுப்புவோம்)
நம்பி வந்தவளை நாதாரி போல் 9/13/11 அன்று இல் pathilai thaedi என்பவர்