Total Pageviews

Monday, January 30, 2012

இப்போ நம்ம கதைக்கு வருவோம். அப்புறம் தொடரும் போட்டு விட்டு மூன்று நாளாய் ஆளை காணோம்.நான் தான் உழைத்து சாப்பிட வேண்டிய நிலை. எனக்கு தான் வேலை இருந்ததினால் மூன்று நாளாய் நெட்டை தொடவில்லை. அங்கே என்ன ?
உங்களிடமிருந்து (குணமாக்குமுன், குணமாகுமுன்) இன்னும் நிறைய எதிர்பார்கிறேன், எதிர்பார்க்கிறோம். என்ன புரியுதா? இன்னும் நிறைய................ ம். எடுங்கள் பேனாவை......
(யாரும் தப்பா நினைக்காதீங்க. இவனை இப்படித்தான்......... அப்போ தான் எல்லோருக்கும் Timepass.)
பிரிட்டிஷ் உளவாளி ஹெம்பர் (Hempher) -இன் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தில் அவர் கூறியதாக சில.....

''இஸ்லாமிய கல்விக்கூடங்கள், பதிப்பகங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும். இலக்கியங்களை தீக்கரையாக்க வேண்டும், மார்க்க நிறுவனங்கள், அறிஞர்கள் பற்றி அவதூறுகளை பரப்புவதன் வாயிலாக தங்கள் குழந்தைகளை மதரசாக்களுக்கு முஸ்லிம் பெற்றோர்கள் அனுப்பா வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும்.
மேலும் ஆலிம்களுக்கு எதிராக பொய்யான அக்கிரமான குற்றசாட்டுகளை பரப்பவும்,அவர்கள் பற்றி மோசமான கண்ணோட்டத்தை ஏற்படுத்தவும்,அவர்கள் பொய்யர்கள்,முட்டாள்கள் என்று பரப்பவும், முஸ்லிம்களிடையே நமது ஒற்றர்கள் சிலரை புத்திசாலியான அறிஞர் போல் நடிக்க செய்து, அவர்களை சீர்திருத்தம் என்ற பெயரில் இஸ்லாமியர்களை உண்மையான அறிஞர்களிடமிருந்து தனிமை படுத்த வேண்டும். இதன் மூலம் அவர்கள் குழப்பமுற்று அனைத்து ஆலிம்களையும் ஐயத்தோடு பார்க்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்''.
என்று ஹெம்பர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் இன்ஷா அல்லாஹ் தொடரும்.

Thursday, January 26, 2012











இன்ஷா அல்லாஹ் வரும் 28- தேதி ஷஹீத் பழனி பாபா (ரஹ்) அவர்களின் 15-ம் நினைவுநாள் பொதுக்கூட்டம் அவரது சொந்த ஊரான ஆய்க்குடியில் நடக்கிறது.

Wednesday, January 25, 2012

''ஆகவே பத்திர்ரிக்கையில் ஹைகோர்ட் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவு போடுகிறது என்றாலே நில மோசடி நடந்துள்ளது என்பதே பொருள்.இதற்காக சர்வே நம்பர் தேடி, வில்லங்க சர்டிபிகட் காட்டு என்றால் அது என் வேலை இல்லை''
என்று எழுதிஉள்ளான்.
நான் சொல்லுவது அந்த பத்திரிக்கை செய்தியை தான் காப்பி செய்து உனது ப்லொக்கில் போடு என்கிறேன்.சர்வே நம்பரை போட சொல்லலை.( ஒன்னால உருப்படியான வேலை செய்ய முடியாது என்று எனக்கு தெரியும்.) அதை விட்டு விட்டு சத்தியம் செய், சத்தியம் செய் என்றால், நான் சொல்வது நீ சொன்ன பொய் புகாருக்கு ஆதாரம் காட்டுஎன்கிறேன்.
நான் சொல்லல நம்பவில்லை என்று. அவன் நேத்து சொன்னதை இன்று பொய் ஆக்கிட்டான்.( அவன் தொடரும் என்று போட்டதை தான் சொல்கிறேன்). நான் பயப்படலை. நீ இன்னும் என்னை பற்றி போடு, அசிங்கபடு.
அப்புறம் எல்லா புகாரும் சொன்னாய். இன்னும் ஒன்னு பாக்கி அது கள்ளத்தொடர்பு. அதையும் ஏன் விட்டுவைக்கிறாய்
அப்புறம் எஸ்கேப்பு...... போல
அவனும் எவ்வளவு முடியுமோ, முடிந்த வரை சமாளித்து பார்த்தான். முடியல. விட்டுட்டான். ஆமா சிகிச்சை இல்லாமல் குணமாகுமா?
அதிசயமாத்தான் இருக்கு. ஆனா நான் நம்பவில்லை. It is Medical Miracle. (this is not a cinema words). Allaahu Akbar. ஆனா இப்பவும் சொல்றேன் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னை சீண்டாம அவனுக்கு ............... ஏது?. கண்டிப்பா ஏதாவது சொல்லி மீண்டும் ஆரம்பிப்பான்.
ஒருவேளை தப்பிக்கிரானோ ?

Monday, January 23, 2012

நான் புத்தக கண்காட்சியில் கீழ்க்கண்ட புத்தகங்களை வாங்கினேன். அவை



  1. நாம் பிரிந்து விட வேண்டாம்- Dr. யூசுப் அல் கர்ளாவி

  2. இஸ்லாமிய எழுச்சி - '' ''

  3. மேலப்பாளைய முஸ்லிம்கள் - பே. சாந்தி

  4. ஜிஹாத் - செயத் அபுல் அஹ்லா மௌதூதி,

  5. இயக்கம் வெற்றி பெற - '' '' ,

  6. விண்வெளி,வியப்பு, விசித்திரம்- ராமதுரை,

  7. மொசாத் - ந. சொக்கன்,

  8. ஹசரத் பிலால் --- - கிரெய்க்,

  9. தகவல் உரிமை சட்டம் - சிவ.இளங்கோ .

  10. மர்மங்களின் பரம பிதா நேதாஜி - - மருதன்

  11. நாங்கல்ம்யேன் முஸ்லிம் ஆனோம் --- ச.பா.பே.

  12. lபிரிட்டிஷ் உளவாளி வாக்குமூலம் ---ச.பா.பே.

  13. யார் இந்த காதியானிகள் - - ச.பா.பே.

  14. குண்டு வெடிப்பு பின்னணியில் காதியானிகள் -----ச.பா.பே.

  15. இஸ்லாமிய நம்பிக்கைகளும் போதனைகளும் ---- குலாம் சர்வர்

  16. இப்பி பக்கீர் ---- A.M.யுசுப்

  17. உள்ளொளிப்பயணம் ----ரபியுத்தீன் ஹசரத்

  18. இமாம் ஹசனுல் பன்னா ----- செயத் அப்துர்ரஹ்மான் உமரி

  19. தோழர் பழனி பாபா -விந்தை வேந்தன்

  20. ரணம் சுகம் -- சம்மீர் ( என் நண்பர்)

  21. நியான் நகரம் -- '' '' ''

  22. பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி ( எனது தந்தைக்காக)

  23. சுஜாதாட்ஸ் ------ சுஜாதா .

ஆனால் இதில்லெல்லாம் மிக அவசரம். அந்த மனச்சிதைவு புத்தகம். நமக்கு தெரிந்தவர்கள் யாரும் மனச்சிதைவின் ஆரம்ப நிலையில் யாரும் இருந்தால் எனது ப்ளாக்கை படிப்பவர்கள், அவர்களை குணப்படுத்த நினைக்கலாம் என்பதால் தான் அதை முதலில் எழுதினேன்.

இன்ஷா அல்லாஹ் முடிந்தால் Dr. யூசுப் அல் கர்ளாவி அவர்கள் எழுதிய கருத்து வேறுபாட்டுக்கும், கருத்து முரண்பாட்டுக்கும், மனமுரண்பாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை எழுதுகிறேன்.

Sunday, January 22, 2012

''ஊரை அடித்து உலையில் போட்ட (செய்தி தினசரி பத்திரைக்கைகளிலும் வந்துள்ளது) அடுத்தவர் காசை செலவழித்தும்.''
என்று சைக்கோ கிறுக்கிஉள்ளான்.
அவன் பல பொய்யை நிருபிக்க வேண்டாம். இந்த பத்திரிக்கை செய்தி ஒன்றை மட்டும் நிருபித்தாலே போதும் அவன் சொன்னதை செய்கிறேன்.(நான் உண்மை சத்தியமே செய்கிறேன்.) ஏனென்றால் பத்திரிக்கை செய்தியை (நகலை)அவன் ப்லொக்கில் போட முடியும்.அவன் என் மீது சொன்ன மற்ற பொய்களை நான் சத்தியம் செய்தால்தான் அவன் நிரூபிக்க முடியும் என்று சொல்கிறான். ஆனால் இதை அவன் பேப்பர் செய்தியை ஆதாரம் காட்டாலாம். நான் தப்பிக்க முடியாது . அதை கூட போட முடியவில்லை என்றால் அவன் ................ சந்தேகிக்க வேண்டும். (இப்படி போடுவதை யாரும் தவறாக என்ன வேண்டாம்.)
இதையாவது நிருபி சத்தியத்திற்கு பிறந்த சத்தியமே.
இதெல்லாம் ஒரு பிழைப்பு. இதுக்கு ............................. ( அப்புறம் அவனுக்கு இதெல்லாம் ஜுஜூபி)
ஹய் மீண்டும் மாட்டிகிட்டான். ஆனா ஒண்ணுங்க அவன் கோபத்தில்தான் பொய்யை பொய் என்று நிறுபிக்கிறமாதிரி உளர்றான்.

Saturday, January 21, 2012

ஹை மாட்டிகிட்டான்.......
நான் மனச்சிதைவு(சைக்கோ ) பற்றி எழுதியதற்கு யாருக்கும் கோபம் வரவில்லை இது வரை. ஆனால் ஒருவனுக்கு மட்டும் கோபம் வந்துள்ளது. தனது ப்லொக்கில் தனது மன நிலையை ஒப்புக்கொண்ட மாதிரி ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளான். சீக்கிரம் பாருங்க.........

Friday, January 20, 2012

ஒசன்காச்சாவின் மானத்திற்கு இரண்டாம் நகரா
நாளை ஒலிக்கும். முதல் நகராவிற்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து இரண்டாம் நகராவும், ஒரு நாள் கழித்து மூன்றாம் நகராவும் ஒலிக்கப்பட்டு,
ஒசங்காச்சாவின் மானம் நல்லடக்கம் செய்யப்படும்.அனைத்து வகை பாத்தியாக்களும், அபூர்வ துவாக்களும் செய்யப்படும்.
அனைவரும் வாரீர் ! வாரியளோடு வாரீர்!! 18 ஜனவரி, 2012.
என்று 18-ம், தேதி எழுதிஉள்ளான்.
அவன் இதையாவது நிருபிக்கிரானா என்று பாப்போம்.
அவனுக்கு கடைசி சான்சு. அவன் நார்மல் என்று நிருபிக்க கடைசி சான்சு.
அவன் நிருபிக்க வில்லை என்றால் அவன்..................................... .
அப்புறம் ..................... மீதி அப்புறம்.
ஹை...... சூப்பர் மாட்டிகிட்டான்.

Thursday, January 19, 2012

இன்று (19-01-2011) ஊரில் நடந்தது என்ன?
உண்மையை( உண்மை செய்தியை) ஊர் பொதுவான மக்களிடமும், பொய்யை (பொய், புரணி செய்தியை) வேறு ஏதாவது (வழக்கம் போல்) ப்லோகிலும் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் நெட்டில் பார்த்தபின் ஊரில் நடந்தது என்ன என்று விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் .

Wednesday, January 18, 2012

நண்பன் என்று ஒருவர் இந்த மெசேஜ் அனுப்பி உள்ளார்;
வசியப்படுத்துவான் என்று கூறி உள்ளீர்கள். நன்றி. நாங்கள் சலாம் சொன்னால் நீங்கள் ஒரு இஸ்லாமியன் போன்று பதில் சொல்லி பாருங்கள் , நீங்கள் சொன்ன கல்லூரி மாணவர்கள் போன்று அல்லாமல் நீங்களும் வசியப்படுவீர்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் அல்ல. எங்களுடன் இயக்க வெறியில்லாமல் கொஞ்சம் அன்பாக பேசிப்பாருங்கள், ஒருவேளை நாங்களே வசியப்படலாம். நாம் இருவரும் இறைவனின் மீது கொண்ட தக்வாவிற்க்கு வசியப்படலாம். மேலும் உண்மையான ஈமான் கொண்டோருக்கு புரியும் சலாத்தின் மகிமை. மீண்டும் கூறுகிறோம் ""அஸ்ஸலாமு அலைக்கும்
இதன் அர்த்தத்தை நல்ல உள்ளத்துடன் உணர்ந்து பாருங்கள். அந்த வார்த்தையின் கணம், கண்ணியம்,முஹப்பத், அன்பு, உலகளாவிய சகோதரத்துவம், சத்தியம் புரியும்.
என்று அனுப்பயுள்ளார்.

Sunday, January 15, 2012

தமிழர்கள் அனைவருக்கும்
''இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்''.
இந்த தமிழ் புத்தாண்டில் குழப்ப வாதிகளையும்,குதர்க்க வாதிகளையும்,பிறரின் இழப்பில், உழைப்பில் ஆதாயம் தேடும் ஒட்டுண்ணீ களையும், அடையாளம் கண்டு அவர்களை புறக்கணித்து தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.


வண்,
றாம்ண்ணை தி.மு.க.

Friday, January 13, 2012

மனச்சிதைவுக்கு (சைக்கோ) ஆளானவரை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.





  1. தொடர்பில்லாத கோர்வையற்ற பேச்சு.


  2. உளறலான பேச்சு.


  3. கேள்விகளுக்கு அர்த்தமற்ற பதில்கள்.


  4. தர்க்க அடிப்படையோ நோக்கமோ அற்ற பேச்சு.


  5. தனக்கு தானே பேசிக்கொள்வது.


  6. வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்து கொண்டே இருப்பது.


  7. யார் என்ன பேசினாலும், நம்மை பற்றிதான் பேசுகிறார்கள் என்று எண்ணுவது.


  8. எவரை பார்த்தாலும் இவன் நம்மை அடிக்க தான் வருகிறான் என்று எண்ணுவது.


  9. சம்பந்தம் இல்லாதவருடன் சம்பந்தம் இல்லாதவரை பற்றி சண்டை போடுதல்.


  10. தன்னை தவிர மற்றவர்களை குறை கூறி கொண்டே இருப்பது.


இது மாதிரி யாரையேனும் கண்டால் கீழ்கண்ட சமூக சேவக அமைப்புகளை அணுகலாம். இவர்கள் சமூக குழப்பத்தால் பாதிக்கப்பட்டு மனச்சிதைவுக்கு (சைக்கோ) ஆளானவர்கள்.


Subitcham, Famil Fellowship for Mentally III & Mentally Retarded, Plot No. 643,K.K.Nagar, Madurai-625020
Shristi, Munsundagiripatty, Chittampatty(po), Melur Taluk, Madurai-625122

Tuesday, January 10, 2012

சென்னையில் நடந்து கொண்டு இருக்கும் புத்தக கண்காட்சியில் சில புத்தகங்கள் வாங்கினேன்.அதில் ஒரு புத்தகம் ''முறிந்த மனங்கள்'' . அது மனசிதைவு (Psycho, mental disorder) சம்பந்தமாக Dr. விஜய் நாகசாமி அவர்கள் எழுதியது.
அதில் மனச்சிதைவுக்கு சில காரணங்களை டாக்டர் கூறுகிறார். தமிழில் மனச்சிதைவு பற்றிய புத்தகங்கள் மிக குறைவு. இந்த புத்தகம் மிக தெளிவாக விளக்குகிறது.




  1. வாழ்க்கை நெருக்கடி


  2. சிறு வயதில் துன்புருத்தப்பட்டிருந்தால்


  3. பரம்பரை காரணம் (25%)


  4. சமுதாய குழப்பம்


இதில் சமுதாய குழப்பம் என்பது இந்த சமுதாயத்தை திருத்த தான்மட்டுமே பிறந்திருப்பதாக மற்றவர்கள் சொல்வதை உண்மையென்று நம்பி, சமுதாயத்தை திருத்த போவதாக சொல்லி கிளம்பி கடைசியில் மனச்சிதைவுக்கு ஆளாகிவிடுவது. மேலும் இந்த மாதிரி சைக்கோ ஆகிரவர்களால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் குடும்பத்தினரும், சமுதாயமுமே. இதனால் மனச்சிதைவுக்கு ஆளான சைக்கோ மக்களால் கவனிப்பாரற்றும், ஒதுக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர் இவர்களை அச்சத்தோடும் கூட (உறவினர்கள் உட்பட) நோக்குகிறார்கள்.



ஆனால் இந்த மனச்சிதைவை (சைக்கோ) உறவினர்கள் அல்லது நண்பர்கள் நினைத்தால் அவர்கள் மனநல மருத்துவர்(Psychiatrist) உதவியுடன் குணப்படுத்தலாம். இதுவே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி ஆகும்.



Monday, January 9, 2012

நண்பன் சொன்னது ( அனுப்பியது)
குஜராத் பற்றி பேசவேண்டிய அவசியம் வந்தால் முன்பை விட அதிகமாக, விரிவாகத்தான் பேச வேண்டி இருக்கும்.நீங்களும் பொறுமையாக இருந்து கேட்டால் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றால் புத்தகங்கள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். அது நன்று.
குஜராத் பற்றி பேசுவான் என்று ஒப்புக்கொண்டு அதை பிறர்க்கு தெரியும் படி வெளியிட்டதற்கு நன்றி. மேலும் குஜராத் போன்ற matra விசயங்களை விட்டு விட்டீர்கள். அதை துருவி துருவி ஆராய்ந்து வெளியிட்டால் வசதியாக இருக்கும்.
அப்புறம் வெளிநாட்டில் இருந்து வந்தால் சுற்றி சுற்றி வருவது யாருடைய பழக்கம், அதுவும் எதற்காக சுற்றுகிறார்கள் என்பது ஊரில் எல்லோரும் அறிந்த விசயம்தான். ஆகையால் அது பற்றி பேச விரும்ப வில்லை.
Jan. 8, 2012, 3:26 Pm

Sunday, January 8, 2012

நண்பன் என்ற பெயரில் இந்த மெசேஜ் ஒருவர் அனுப்பி உள்ளார்;

''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்பது இஸ்லாமிய முகமன் என்பதை தங்களுக்கு நினைவு படுத்துகிறேன். ஆனால் நீங்கள் முதலீடு என்று எழுதி உள்ளீர். அது உண்மையே. ஏனெனில் சலாம் நன்மைக்கான முதலீடு என்பதையும் நினைவுபடுத்துகிறேன். அல்லாஹ் சொல்ல சொல்கிறான். நபி (ஸல்) அவர்களும் அதிகமாக சலாத்தை பரப்புங்கள் என்று கூறி இருக்கிறார்கள். அவர்களும் அதை செய்தார்கள். ஆகையால் இன்ஷா அல்லாஹ் அந்த முதலீடை அதிகமாக செய்யத்தான் போகிறோம்.( அந்த முதலீடில் யாரும் கள்ள கணக்கு, நஷ்ட கணக்கு காட்ட முடியாது. அது அல்லாவிற்கும் அடியானுக்கும் உள்ள கணக்கு. அல்லாஹ் பெயர் சொல்லி கூட யாரும் கள்ள கணக்கு காட்ட முடியாது). தாங்களவெறுத்தாலும் சரி.
"'அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹமதுல்லாஹி பரக்காதுஹு) ''

அடைப்பு குறிக்குள் இருப்பவை எனது(நிஜாம்) கருத்து.