Total Pageviews

Sunday, August 7, 2011

ப.க.ப-விற்கு கேள்விகள்;

'''இவர்களது பொய்களை சுட்டி காட்டினால் ஒப்பந்தம் முடிந்து விட்டது இடத்தை ஒப்படையுங்கள் என்கின்றனர்.ஒப்பந்தம் முடிந்தால் மீண்டும் ஒரு ஒப்பந்தமோ ஒப்பந்தம் இல்லாமலோ எங்களது தொழுகைகளுக்கு இடம் அளிப்பதில் இவர்களுக்கு அப்படி என்ன குடி முழுகி போகும் சமாச்சாரம் (வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011) என்று ப.க.ப. எழுதிஉள்ளார்.

அரசனின் கேள்விகள்;;

1- ஒப்பந்தம் முடிந்துவிட்டால், வக்ப் சொத்தை பள்ளிக்கு ஒப்படைத்து விடுவதில் உங்களுக்கு தான் அப்படி என்ன குடி முழுகி போகும் ?(ஒரு முஸ்லிமிற்கு அழகு ஒப்பந்தத்தை மீற கூடாது)

2- நீங்கள் இதுவரை ஒப்பந்தம் நீட்டிப்பு பற்றி நிர்வாகத்தினரிடம் கேட்டு இருக்கிறீர்களா?
3- நீங்கள் அல்லவா அன்று காவல் நிலையத்தில் ஒப்பந்தம் நீடித்து கேட்கிறீர்களா என்று ஆய்வாளர் உங்களிடம் கேட்டதற்கு '' தந்தாலும் சரி, தரவில்லைஎன்றாலும் சரி, சிவிலில் பார்த்து கொள்ளுங்கள்'' என்று (முறையற்ற முறையில்) பதில் அளித்தீர்கள். இது முறையான பதிலா?
4- இந்த பதிலை கேட்ட பிறகும் எந்த நடுநிலையாளரை வைத்து உங்களிடம் பேச முடியும்? சென்ற ரமளானில் (நமது ஊரில் அல்ல, தமிழ்நாட்டில்) நடந்த சம்பவத்தை யாரும் மறக்க வில்லை இந்நிலையில் யார் பேச முன் வருவார்கள்?

பள்ளியில் உங்களுக்கு (எல்லோருக்கும், எல்லா பள்ளிகளிலும்) உள்ள உரிமை பள்ளியில் தொழுகை, அடக்கம் ,திருமணம் மற்றும் மார்க்க விசயத்தில் அனைத்திலும் பங்கு தானே தவிர பள்ளி சொத்தை தனியாக பிரித்து தாருங்கள் என்று கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை. பிரித்து கொடுக்கவும் யாருக்கும் அதிகாரம் இல்லை.

August 7, 2011 2:54 PM

1 comment:

Arasan said...

ப க. பவிற்கு கேள்வி:
போலிஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் சமரச முயற்சியில் முடிவு ஏற்படாத நிலையில்சென்னையிலிருந்து போனில் உங்களது தொழ வராத செயலாளருக்கு உத்தரவுகள் வந்து கொண்டு இருக்கஅதன்படி அவர் இரண்டாவது ஜமாத்தில் பிடிவாதம் காட்ட//// என்று எழுதி உள்ளீர்கள்
அரசனின் கேள்வி:
அன்று காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன்பு செயலாளர் பசீர் அவர்கள் செல் போனில் பேசினார் என்று சொல்ல வருகிறீர்களா?
அல்லது வெளியில் வந்து பேசினார் என்று சொல்ல வருகிறீர்களா?
இந்த இரண்டு கேள்விக்கும் பதில் உண்மையை நீங்கள் கூறினால் நீங்கள் உண்மையாளரா? அல்லது பொய் சத்தியம் செய்பவரா? என்று மக்களுக்கு விளங்கி விடும்.(இது பண்ணை நியுசிலும் வரும்)
இந்த கேள்விக்கு கள்ளவோட்டு கேள்விக்கு பதில்சொல்லாமல் ஓடியது போல் இல்லாமல் பதிலை ஆவலுடன்.... ..
(உண்மையை) எதிபார்க்கும் தம்பி அரசன்.