Total Pageviews

Saturday, August 4, 2012

                            இவன் பள்ளிவாசலுக்கு எதற்கு வருகிறான்.......?
 
சகோதரர்களே !  
                நமது ஊர் பள்ளிவாசல் நிர்வாகத்தை பற்றி அவன் கக்கூஸ் வழியாக
வந்தவர்கள் என்று ஒரே ஒப்பாரி வைத்து வருகிறானே, அது உண்மையா ..? 
உங்கள் தரப்பில் ஏன் பதில் இல்லை  என்று  கேட்கிறார்கள்.  அவன் ஒப்பாரிக்கு   இந்த விளக்கத்தை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
 
                நமது ஊரில் 1-8-2010 -க்குமுன்பு வரை பள்ளிவாசல் நிர்வாகத்தை  தேர்ந்தெடுத்த முறையை நீங்கள் அனைவருமே நன்கு அறிந்திருப்பீர்கள்.  வெள்ளிகிழமை  ஜும்மாவிற்கு பிறகு பெரியவர்கள் கூடி இவர்தான் தலைவர், இவர்கள்தான் நிர்வாகிகள் என்று சிலரை காட்டிஒருமனதாக 
முடிவுசெய்து   கையெழுத்து வாங்கி நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதுதான் நமதூர் வழக்கம். அப்படி தேர்ந்தெடுத்த நிர்வாகிகளும் நன்றாக  நிர்வாகம் செய்து வந்தது  எல்லோருக்கும் தெரிந்ததே.அப்போது இருந்த நல்லவர்கள் பள்ளிவாசலுக்காக தன் சொந்தபணத்தில் நிலம், வயல் போன்றவற்றை  வாங்கி பள்ளிக்கு வக்ப் செய்து இருந்தனர்.  
 
           ஆனால் இப்போது  இருக்கிற நிர்வாகத்திற்கு  முன்பு இருந்த பழைய 
நிர்வாகத்தினர், அந்த வக்ப் செய்யப்பட்ட பள்ளியின் இடங்களை விற்க தீர்மானம் போட்டனர், எதிர்ப்பு கிளம்பி அது  முடியாமல் போனதால் 
பிறகு ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொள்ள தரை வாடகைக்கு விடலாம் 
என்று  ஏழைகள் பெயரைக்காட்டி சமாளித்தனர். வீடுகட்ட
வசதியில்லாததால் தானே ஏழைகளாக வாடகை வீட்டில்  வாழ்கின்றனர், அவர்களால் எப்படி வீடுகட்ட முடியும் சகோதரர்களே!  ஆக தரைவாடகைக்குவிட்டு  தங்களுக்கு வேண்டியவர்களுக்கு   இடத்தை தாரை வார்க்கலாம் என்பதே இவர்களுடைய நோக்கம்போலும். 
 
          பள்ளிவாசல் கட்டபோகிறோம் என்று ஒரு கமிட்டியை உருவாக்கி
 அல்லாஹ்வின் இல்லம் என்ற பெயரைக்கூறி  பல லட்சங்களை வசூல் 
செய்தனர். ஒவ்வொருவரும் தங்கள் உழைப்பிலிருந்து கொடுத்த அத்தனை 
லட்சங்களுக்கும், இவர்கள் பள்ளி கட்டினார்களா...? இல்லை.   ஒரு  பள்ளிக்கு தற்காலிக பள்ளி 20 -லட்சத்திற்கா  கட்டுவார்கள்...?   தற்காலிக  பள்ளிக்கே இவ்வளவு லட்சம் செலவு செய்தால் பள்ளியை எப்படி கட்ட முடியும்...?   மண்டபம் கட்ட போகிறோம் என்று கூறியா பணம் வசூல் செய்தார்கள்....?  சரி தற்காலிக பள்ளி கட்டி முடிந்த பிறகாவது பள்ளி கட்ட ஏற்பாடு செய்தார்களா......?    அதுவும் இல்லை. அதோடு விட்டார்களா..? தற்காலிக பள்ளியை மண்டபமாக மாற்றினார்கள். அதுவும் சமையலறை இல்லை,  கழிப்பறை  இல்லை, மணமக்கள் அறைகள்  இல்லை. பின்னர் சமையலறை  கட்டினார்கள். அது காற்று போக வழியில்லாத ஒரு அறையாக கட்டினார்கள்.  மண்டபத்திற்கு முன்னால் கழிவறையை  கட்டி பணத்தை  வீணாக்கி விட்டார்கள்.இப்பொழுது அதை சரியான மண்டபமாக மாற்றுவதாக 
இருந்தால்கூட இன்னும் பத்து லட்சம் ஆகிவிடும் .   இந்த கமிட்டியினரின் செயல்பாடுகள்  சரி இல்லாத காரணத்தினால்தான்  சில  நல்லவர்கள்  இடையிலேயே  விலகி விட்டார்கள்.
 
              இது போன்ற இன்னும் சில காரணங்களால்தான் இவர்கள் நிர்வாகத்தை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி வக்ப் இன்ஸ்பெக்டர்  முன்னிலையில் நடந்த பொதுகுழுவில் மீண்டும்  
அவர்களே நிர்வாகத்திற்கு வருவதற்கு ஏற்றவாறு கடிதம் கொடுத்தார்கள்.  அதற்கு ஜமாத்தார்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.  யாக்கூப் சாகிப் தலைமையில் 
ஒரு நிர்வாகிகள் பட்டியல் கடிதத்தை வக்ப் ஆய்வாளரிடம் கொடுத்தார்கள்.
 இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த பொதுகுழுவில் ஒரு முடிவு கிடைக்காதலால் தேர்தல் வைத்து தேர்ந்து எடுப்பது என்று வக்ப் இன்ஸ்பெக்டர் அறிவித்தார்.
 
          பின்னர் 1-8-2010 அன்று ஆறாம்பண்ணை வரலாற்றில் ஜமாத்திற்கு  
முதன்முறையாக  தேர்தல் நடத்தப்பட்டு,  யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், பெரும்பான்மையினரின் ஆதரவுடன் புதிய நிர்வாகிகள் 
தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல்லாஹ்வுடைய நாட்டமே  நிறைவேறியது.
அல்ஹம்துலில்லாஹ்..
 
             இப்படி முறையாக தேர்தல்  நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட  நிர்வாகிகளை பார்த்துதான்  இந்த மனம் குழம்பியவன் ( சைக்கோ)   தன்னால் நிர்வாகத்தில் நுழைந்து பழைய மாதிரி குழப்பம் செய்ய இயலவில்லையே  என்ற வயிற்றெரிச்சலில் கக்கூஸ் கக்கூஸ் என்று கத்துகிறான். ஆனால் உண்மையில்  தினமும் இவன்  நடவடிக்கையை  கவனித்து பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும். இவன் பஸ்ஸை விட்டு ஊர் வந்து இறங்கியவுடன் இவன் போகும் ஒரே இடம் பள்ளிவாசலின் 
கக்கூஸ்  தான். நமது ஊர் பள்ளிவாசலை கக்கூஸ்-காக  மட்டும் பயன்படுத்துபவன்  ஊரில் இவன் ஒருவன்தான்.  
 
              எனவே சகோதரர்களே ! இவனுக்கு வேற வேலை இல்லை. எல்லா நிர்வாகத்திலும் இருக்க அலைவான். இவனை துரத்தியது துரத்தியதாகவே   இருக்கட்டும். உள்ளே சேர்த்து விடாதீர்கள். திரும்பவும்  சேர்த்தால் அவ்வளவுதான்......... அப்புறம் கணக்கு  கேட்டு அவன் பின்னாடிதான்   அலையணும். எல்லோருக்கும் நடப்பு தெரியும் தானே....?  பார்த்து  கொள்ளுங்கள். 
 
                                  கக்கூஸ் வழியாக வந்தார்களா..? இல்லை 
கக்கூசிர்காக      வருகிறானா...?     நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.        
   
                   

No comments: