Total Pageviews

Monday, August 20, 2012

                    பண்ணையாரின் பாவத்திற்கு துணை போகாதீர்கள் 
 
          திருக்குர்ஆனில் அல்லாஹ், வட்டி வாங்குபவர்களைத் தவிர வேறு யாருடனும் போர்ப் பிரகடனம் செய்வதாக அறிவிக்கவில்லை. அல்லாஹ்விடம் இக்குற்றம் எந்த அளவுக்கு மோசமானது என்பதை விளக்குவதற்கு இவ்விரு வசனங்களே போதும்.
          நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக  இருப்பின் (உங்களுக்கு வர வேண்டிய) வட்டிப் பாக்கியை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும்  (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்ட தென்பதை அறிந்து கொள்ளுங்கள் (அல் குர்ஆன்  2:278,279)
           சகோதரர்களே ! நான் ஒரு தௌஹீதுவாதி, மார்க்கத்திற்காக  நான் பல  வாதங்கள் செய்து உள்ளேன்  என்று தன்னை அறிவாளி போல காட்டி மக்களை     நம்ப  வைக்க வேசம்  போட்டு வந்த பண்ணையார், இவன் என்னவோ ராஜபரம்பரை  மாதிரி எழுதி தள்ளினான். ஆனா இவ்ளோ நாளா இவன் என்ன காரியம் செய்துள்ளான் பார்தீர்களா.. அப்படி என்ன கஷ்டம்... அவன்தான் நான் எப்படி இருந்தேன் தெரியுமா.. என்று கேட்டு இருக்கிறான். ஆனா வட்டி வாங்கி இருக்கான்.  அதுலேயும் ஒன்னுரெண்டு இல்ல சீட்டுவட்டி, அடகுவட்டி, பேங்க்வட்டி, மார்வாடி வட்டி, இன்னும் என்னலாமோ இருக்கோ யார் கண்டா... ஆ...ம்  புதுசா வேன்வட்டி வேற ( அதான் துரத்தினாங்களே...)  
          இப்னு   மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''வட்டி எழுபத்து மூன்று வகைகளை கொண்டது. அதில் மிகக் குறைந்த பாவம் ஒருவன் தன தாயிடம் விபச்சாரம் செய்வதற்கு சமமாகும். வட்டியில் மிகக் கொடியது ஒரு முஸ்லிமின் மானம் மரியாதைக்கு பங்கம் விளைவிப்பதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' (ஹாகிம்).  
          ''ஒருவன் அறிந்து கொண்டே ஒரு திர்ஹம் வட்டியை உண்பது அறுபத்து மூன்று தடவை விபச்சாரம் செய்வதை விடக் கொடியது'' அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) நூல்: அஹ்மத்    
                        இதுல பேராசை புடிச்சி அதிக வட்டிலாபம் கிடைக்குமுன்னு நாகர்கோவிலுக்கு பஸ் ஏறிபோய் சீட்டு போட்டுஇருக்கிறான். இந்த லட்சனத்துல இவரு மார்க்க எதிர்ப்பாளர்களிடம் வாதம் பண்ணினாராம்.... அவர்களாவது  வெளியிலிருந்து  நேரடியாக எதிர்கிறார்கள். ஆனால் நீ மார்க்கத்தை ஏற்று  கொண்டவன் போல காட்டிக்கொண்டு மார்க்கத்தில் உள்ளே இருந்து கொண்டே அல்லாஹ்விடமும்,  அவனது ரசூலிடமும் போர் புரிவதற்கே  துணிந்து விட்டாயே..... 
             நீ மற்றவர்களுக்கு மார்க்கத்தை சொல்வதற்கு  முன் நீ  அதனை  நடைமுறைபடுத்துவதற்கு  பழகிக்கொள். ஏன்னா நீ இவ்வளோ நாளாக செஞ்சிருக்கிறது  மிகப்பெரும்பாவம்.  இதுலிருந்து  மீள்வதற்கு  வழியை  தேடு. வாழ்க்கையில்  இனி மேலாவது உன்னை திருத்தி கொள்.                    
        ''நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?''  (அல் குர்ஆன்-2:44 )

            எனவேசகோதரர்களே!  இனிமேலாவது இவரை இதுபோன்ற பெரும்பாவங்கள் செய்வதை விட்டு உங்களால் முடிந்தால் தடுங்கள்.  இத்தகைய பாவங்களை செய்து தனக்குதானே  அவரே ஏற்படுத்திகொண்ட பகைமைக்காக  நீங்கள் பரிந்து  பேசாதீர்கள். அல்லாஹ்வின்  வசனத்தை  நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்    

     ''இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்''. (அல் குர்ஆன்-5: 2 )
 
                                                                இப்படிக்கு,
                                                         ரியாத் அவுட் நபர்  

No comments: