Total Pageviews

Monday, July 16, 2012

அஸ்ஸலாமு அலைக்கும்.
                     பள்ளி புனரமைப்பு மற்றும் விரிவாக்க கமிட்டி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட  கமிட்டி ஆரம்பித்தநாள் முதல் பள்ளி புனரமைப்பு, பள்ளி   விரிவாக்கம்  ஆகிய இரண்டையும் செய்யவில்லை. அனால் சமையல் அறை  இல்லாத மண்டபம் கட்டியுள்ளது. அது (பழைய பு.க.) தடம் மாறியதற்கு  யார் காரணம்  என்று எனக்கு தெரியாது.  அனால் புதிய ஜமாஅத் நிர்வாகம் பள்ளியை புனரமைக்கவும், பெருநாள் சமயத்தில் இடநெருக்கடி சமாளிக்க ஒரு துணை கட்டிடம்  (விரிவாக்கம்) செய்ய   நினைத்து அந்த பணத்தை புனரமைப்பு கமிட்டியிடம்  (பழைய) அதன் தலைவர் பாரி அவர்களிடம் கேட்டதற்கு அது வேற கமிட்டி இது வேற
கமிட்டி என்று  கூறிவிட்டார். அந்த சமையலறை இல்லா  மண்டபம்  கட்டிய பிறகாவது, பள்ளி கட்ட ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?
அதுவும்  இல்லை. எழுத்து பூர்வமாக கேட்டும் கொடுக்கவில்லை.
          நானும் ஒன்னும் செய்ய மாட்டேன், உங்களை செய்யவும் விடமாட்டேன் என்ற நிலையில் பழைய பு.க. இருந்ததால் அதனிடமிருந்து  நிர்வாகத்தை  வாங்க வேண்டிய சூழ்நிலை  ஆகிவிட்டது.  நமதூர் பள்ளியை  விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக அனைவரும் கொடுத்த  பணத்தை யாரோ இருவர் தன் சுயகவுரவத்திற்காக  வைத்து  கொண்டு தரமாட்டேன் என்று கூறும் போது பணம்  கொடுத்தவர்கள்  மனம் என்னபாடு படும் என்பதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள் .
     அந்த  பணம்  எந்த நல்லகாரியத்திற்காக நம்மவர்களிடமிருந்து பெறப்பட்டதோ அந்தநற்காரியங்களை செயல்படுத்தவே,அந்த நிர்வாகத்தை  அவர்களிடமிருந்து கைப்பற்றி அதுவும் முறையாக   ஜும்மாவிற்கு  பிறகு அறிவித்தே கையெழுத்து வாங்கினோம்.
          இந்த நிர்வாகம் ஒன்றும் பள்ளி இடத்தை விற்கவோ, வயலை அழித்து தரை வாடகைக்கு அதுவும் ஒரு பிளாட் ரூ.100-க்கு விடவோ கையெழுத்து வாங்கவில்லை. ஒருவரே பல கையெழுத்தும் போடவில்லை. ( இது யாரையும் புண் படுத்த கூறவில்லை). நாங்களே தன்னிச்சையாக முடிவெடுப்போம் என்று தீர்மானம் போடவில்லை.   ஜும்மாவிற்கு பிறகு முறையாக மைக்கில் அறிவித்து தான் கையெழுத்து வாங்கினோம்.அந்த புதிய பு.க. நிர்வாகத்தை பிடிக்காத ஒருசிலர்  கையெழுத்தும்  போடவில்லை.
       அந்த தீர்மானத்தை முறையாக வங்கியிடம் கொடுத்து, முறையாகவே மாற்றிஉள்ளோம். இதில் அவன் ( அதான் அவன்) கூறியது போல் கள்ளத்தனமாக ஒன்றும் மாற்றவில்லை. இதில் அரசியல் ஒன்றும் இல்லை.
அவன்தான் ஒரு கேவலமான ஒரு அரசியல் செய்தான். ஒரு கொள்கை சேர்ந்த சகோதரர்கள், பள்ளி கட்ட கொடுத்த  பணத்தை  திரும்ப  கேட்கிறார்கள் என்று  அவர்கள் கேட்காத ஒரு விஷயத்தை அவர்கள் கேட்டது போல் ஒரு மாயை அரசியல் உருவாக்கி,  தன்னை மீண்டும்  தொவ்ஹீத்வாதியாக  காட்ட  நினைத்து வழக்கம்போல் மண்ணை  கவ்வி விட்டான். அல்லாஹு அக்பர்.  இந்த நிர்வாக மாற்றம் எப்போவோ நடந்ததை இப்ப கிளப்ப காரணம் நீங்களே உணர்ந்திருப்பீர்கள்.

  ( கணக்கு....... வரும்...... ஆனா வராது ....... அதை திசைமாற்ற)

     இன்ஷா அல்லாஹ் பு.க.வின் பள்ளி புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணியின் திட்டம்  பற்றி மீண்டும் வெளியிடுகிறேன்.

No comments: